​​நமசிவாய  உழவாரப்படை  சாரிடபல்  ட்ரஸ்ட்
(Namasivaya UlavaraPadai Charitable Trust)

உழவார பணி வரலாறு

Phone : +91 9840204639

​​​இத்திரு உழவார பணி தற்போது 175 மாதங்களை கடந்து அனைத்து சிவனடியார்களின் கடுமையான அர்ப்பணிப்பால் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தற்போது சென்னை மற்றும் அதை சுற்றிிுள்ள மாவட்டங்களில் உள்ள பழம்பெரும் மற்றும் தொன்மை வாய்ந்த சிறப்புமிக்க சிவாலயங்களில் உழவார பணி நடந்து முடிந்துள்ளது.
மேற்கொண்டு அடுத்து வரும் மாதங்களில் உழவார பணி ஏற்பாடுகள் செயப்பட்டு வருகின்றன

நமது கண்ணுக்கு எட்டாத கர்மவினைகள் பிடியில் சிக்கி உழவும் கோடான கோடி மக்களின் விமோசனத்திற்காக இக்கலியுக நிகழ்வில் உழவார பணி  அருமருந்தாக அமைந்துள்ளது 


​உழவாரப்பணி நிறுவிய அப்பர் திருநாவுக்கரசர் கிபி 7 நூற்றாண்டு  வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது

உழவாரப்பணி மூலம் மனித மனது செம்மை நிலைக்கு வரும். கல் மண் அப்புறப்படுத்தி ஆலையத்தை நாம் செம்மை படுத்துவது போல் நம் கர்ம வினை போன்றவற்றை நீக்கி இறைவன் நம் மனத்தை செம்மை படுத்துகிறான்.

இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.

ஆன்மீக பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது.

அறிவு பூர்வமாக சிந்தித்தால், கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு ஸ்தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.

எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்

திருநாவுக்கரசர் (அப்பர்) 

திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல ... புகழனார் - மாதினியார் மகனாகப் பிறந்தவர். தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம், மருள் நீக்கியார்.

இளமையில் சமண சமயத் தீவிரபக்தர். தமக்கை வேண்டுதலால் ... (சூலை நோய்ப்பட்டு இறையருளால்) மீண்டும் சைவஞானியானவர்.
" கூற்றாயினவாறு விலக்க கிலீர்" எனும் திருப்பதிகத்தை இவர் பாடியதும், கேட்டு மகிழ்ந்த திருவதிகை வீரட்டானேசுவரர். இவருக்கு
" திருநாவுக்கரசர் " எனும் புகழ்ப் பெயர் கொடுத்தார்.

மகேந்திர பல்லவ மன்னன் (சமணர்) இவரை - மதம் மாறியதற்காக - பலவித கொடிய தண்டனை கொடுத்தும், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என வீர முழக்கமிட்ட சிவஞானச்சிங்கமிவர். முடிவில் கொடிய மன்னனே, இவரது இனிய நண்பனானான்.

" மாசில்வீணையும் " ; " சொற்றுணை வேதியன் " முதலான இவரது பலநூறு தேவாரப்பாடல்கள். சாத்திர, தோத்திரக் கனிகளின " ஜூஸ் " ஆகும்.

சைவத்திருத்தலங்கள் தோறும் சென்று, இறையருள் பெற்றுப் பதிகம் பாடிய முதுபெரும் ஞானப்பழமாகத் திகழ்ந்தவர்.

திருஞான சம்பந்தர் குழந்தை, இவர் முதியவர் இருவரும் பல திருத்தங்களிலே இணைந்து பதிகம் பாடித் தந்துள்ளனர். சம்பந்தர் இவரை அழைத்ததுதான் " அப்பர் " எனும் திருப்பெயர்.

திருக்கயிலையைக் கண்டு தொழ வடநாடு வரை நடந்தார் - ஸ்ரீ திருநாவுக்கரசர்; வயோதிகத்தால் தளர்ந்து இயலாமையால் வாடியது கண்ட சிவனே, இவரை இமயச்சாரலியே உள்ள திருக்குளத்திலே மூழ்கச் சொல்லி திருவையாற்றிலே எழ வைத்து, திருக்கையிலையின் காட்சியை தந்தருளி ஆட்கொண்டார்.

" சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே."

- அப்பர் தேவாரம்