நமசிவாய  உழவாரப்படை

உழவார பணி மேற்கொள்ளும் வழிமுறைகள்


1. முதலில் நமது அருகாமயில் உள்ள சிவாலயங்களில் உழவாரப்பணி தேவைப்படும் சிவாலயங்கள் கண்டரியப்படும்

2. கோவில் தேர்வு செய்தபின் ஆக்கோவிலின் தர்மகர்த்தா அல்லது நிர்வாகிகளின் முறையான அனுமதி பெற்று உழவாரப்பணி ஏற்பாடுகள் மேற்கோள்ளப்படும்

3. கோவில் அனுமதி பெற்றபின் அக்கோவிலை வலம் வந்து அக்கோவிலில் மேற்கொள்ளவேண்டிய பணிகளின் வரையறை, பணிகளின் எண்ணிக்கை, அளவு, காலம், சிவனடியார்களின் பணிதொகுப்பு என அனைத்தும் இறுதி செய்யப்படும்

4. அதன்பின் சிவனடியார்கள் செல்வதற்கு உண்டான வாகன வசதி முறையாக திட்டம் செய்யப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் இருந்து வாகனம் புறப்பாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும். திருப்பணி முடிந்தபின் மாலையில் அந்த வாகனத்தில் சிவனடியார்கள் அனைவரும் திரும்ப அழைத்து வரப்படுவார்கள்

5. காலை அமுது, மதியம் அன்னம் பவிப்பு இவற்றிற்கு சிவனடியார்களில் ஒருவர் அல்லது இருவர் பொறுப்பு ஏற்று நிதி அளிப்பர்

இவ்வாறு அனைத்து வேலைகளும் முறையாக திட்டமிட்டு செயல்படுத்தப்படும்