​உழவார திருப்பணிக்குழு மேற்கொள்ளும் திருப்பணிகள்

நமசிவாய  உழவாரப்படை1. திருக்கோவில்களில் உள்ள அடர்த்த செடிகள், மண்டிக்கிடக்கும் களைகள் மற்றும் முட்புதர்களை அகற்றுதல்


2. வெளிப்புற பிரகாரத்தில் வளர்த்து அடர்திருக்கும் புற்களை அகற்றி சமப்படுத்துதல்


3. உட்புற பிரகாரத்தில் உள்ள தூண்களை தூய்மை படுத்துதல் மற்றும் அத்தூண்களில் உள்ள எண்ணை கரைகளை அகற்றுதல்


4. கோவிலின் உட்புறத்தில் உள்ள உபயோகிக்கப்பட்ட தீப விளக்குகளை அகற்றுதல்


5. கோவிலின் தரைகளை பளிங்கு போல் நீரில் கழுவி சுத்தம் செய்தல்


6. கோவிலின் உள்ப்புறம் மற்றும் வெளிப்புறம் உள்ள சுவர்களை வெள்ளை அடித்து சுத்தம் செய்து வர்ணம் பூசி, காவி பூசி அழகுப்படுத்துதல்


7. சன்னதி உட்புறங்களை சுத்தம் செய்தல்

8. நந்தியம் பெருமாள் சன்னதி சுத்தம் செய்தல்

9. கோபுரங்களில் உள்ள சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டுதல்

10. திருவிளக்குகளை விளக்கி சுத்தம் செய்து பளிச்சிட வைத்தல்

11. சுவாமி மூர்த்திகளை கோவில் அலுவலக அனுமதி பெற்று சுத்தம் செய்தல்

12. சுவாமி வஸ்திரங்களை சுத்தம் செய்தல்

உழவார பணி செய்திடும் சிவனடியார்களுக்கு பணிக்கு நடுவே மோர், தேநீர், பாணகம் ஆகியவை விநியோகிக்கப்படுகிறது

 உழவாரப்பணி இடையில் மதியம் கோவிலிலே நமது சிவனடியார்கள் மூலம் அன்னம் சமைக்கப்பட்டு, காய் கறிகளோடு சிவனடியார்களின் பசியாரப்படுகிறது