அடுத்த திருக்கோவில் பணி
சிறந்த நோக்கத்தோடு ஒன்றிணைந்து நம் செயலாற்றி வரும் இந்த உழவாரப்பணியானது 18 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. பக்க பலமாக இருந்து செயலாற்றிய சிவனடியார்களுக்கும் பிற தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிறவியில் தொண்டு செய்யும் பாக்கியத்தை கொடுத்த ஈசன் அடி பணிந்து நமது பணி மேலும் வளர ஒன்றிணைந்து செயல் படுவோம்.
🙏🙏சிவயாநம🙏🙏
சிவ நமது சபை சார்பாக இந்த மாதம் நடைபெற இருந்த உழாவாரப்பணி மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம் அடுத்த மாதம் கண்டிப்பாக
நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏
நமது சபை சார்பாக ஜீலை மாதம் திருவையாறில் நடைபெற இருந்த உழாவாரப்பணியும் தள்ளி வைக்கப்படுகிறது
பிறகு தெரிவிக்கபடும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்
இப்படிக்கு
நிர்வாத்தினர்
ஆன்மீக உணர்வோடு நமது சபையின் சீரிய உழவார தொண்டானது 17 வருடங்கள் கடந்து 18 வது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. தவத்திரு கிருஷ்ணமூர்த்தி அய்யா, அப்பர் போன்ற பெரியவர் காட்டிய வழியிலே சீரும் சிறப்பாகவும் கண்ணும் கருத்தாகவும் எடுத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நமது சிவனடியார்களுக்கு நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இத்தகைய வாய்ப்பினை நமக்கு அருளிய மகேசன் பாதம் பணிந்து மேன்மேலும் இந்த தொண்டு தொடர வேண்டும் என உள்ளன்புடன் வேண்டி கொள்கிறேன்
அறக்கட்டளை பதிவு எண்: 183/2015
பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பெயர்: நமசிவாய உழவாரப்படை சாரிடபல் ட்ரஸ்ட்
நிறுவனர்: சிவ ஸ்ரீ திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா
முகவரி: எண் 3/2, சிதம்பரனார் தெரு இரமணா நகர், பெரம்பூர், சென்னை 600011
அறக்கட்டளை விவரம்
நம்முடய சைவ வைஷ்ணவ கோவில்கள் அரசர்களால்
கட்டப்பட்டு அவர்கள் காலம் முழுவதும் பேணி
காக்கப்பட்டது. இப்பொழுது நம் காலத்திலும் இந்த கோவில்கள் பேணி காக்கப்பட்டு மக்களுக்கு பயன் பட வேண்டுமென்ற சீரிய நோக்குடன், அப்பர் பெருமான் காட்டிய வழியில் சிவ ஸ்ரீ திரு கிருஷ்ணமூர்த்தி அய்யா
அவர்களால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
நமது சபையின் சார்பாக 200 சிவனடியார்களுக்கு 1 மாதத்திற்க்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. தங்கள் உடல் நலத்திற்க்கும் பாதுகாப்பிற்க்கும் நாங்கள் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.
சிவ வீரமுத்து
சிவ வேணுகோபால்